உடனே பாஸ்வேர்டை மாற்றுங்க: ட்விட்டர் வேண்டுகோள்!

ட்விட்டர் பயன்படுத்துபவர்கள் தங்கள் கணக்கின் பாஸ்வேர்டை உடனே மாற்ற அந்நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்து பயனாளர்களின் பாஸ்வேர்டும் அந்நிறுவனத்தின் தொழில்நுட்பப் புலம் ஒன்றில் சேமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோளாறைக் கண்டுபிடித்து சரிசெய்துவிட்டபோதும், பாதுகாப்புக்காக பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளுங்கள் என்று அனைத்து பயனாளர்களையும் ட்விட்டர் நிறுவனம் கேட்டுக்கொண்டிருக்கிறது. 

இக்கோளாறு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் இனிமேல் இது போல் நடக்கமால் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது என்றும் ட்விட்டர் தெளிவுபடுத்தியுள்ளது. 

No comments:

Powered by Blogger.