Sunday, July 13 2025

ஆண்ராய்டில் சூப்பர்யூசர் பிரிவிலெட்ஜ் பிரச்சனையை சரிசெய்த பேஸ்புக்.!

பேஸ்புக்கின் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா மோசடி பயனர்களை உலுக்கிய நிலையில் இன்னமும் பேஸ்புக் நிறுவனம் அந்த வீழ்ச்சியிலிருந்து மீண்டு வந்துகொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இந்நிறுவனம் தனிநபர் தகவல்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்றாம் தரப்பு செயலிகள் மற்றும் அதன் சேவைகளை தனது தளத்தில் தடுக்க இந்த சமூக வலைதள நிறுவனம் பேசிவருகிறது. அது அப்படியிருக்க, பேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலி, மில்லியன் கணக்கான ஸ்மார்ட்போன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பெறும்வகையில் அட்மின் சலுகைகளை(admin privileges -superuser permissions) இந்தவாரம் கேட்டு பரபரப்பை கிளிப்பியுள்ளது.

ரெட்டிட், டிவிட்டர் மற்றும் இதர இணையதளங்களில் ஏராளமான பதிவுகள் இது தொடர்பாக பதிவிடப்பட்டு இந்த பிரச்சனையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளன. இதற்கு பதிலளிக்கும் வகையில் பேஸ்புக் கூறும் போது, ஒரு கோடிங் எரர்ரால் அந்த பாப்அப் திரை தோன்றியதாக விளக்கமளித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்த பிரச்சனை ரூட் செய்யப்பட்ட கருவிகளை பயன்படுத்தும் பயனர்கள் உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே ஏற்பட்டதாக கூறியுள்ளது. மேலும் தற்போது இந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளது. இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தை இங்கே காணலாம்.

"மோசடியை தடுக்கும் எங்களின் ஒரு செயலியில் ஏற்பட்ட சிறு கோடிங் தவறினால் , பேஸ்புக் பயன்படுத்தும் சிறு எண்ணிக்கையிலான பயனர்களுக்கும், ரூட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள சில அனுமதி மேலாண்மை(permission management) செயலிகளிலும், கூடுதல் பெர்மிசன்கள் கேட்கப்பட்டது.எங்களுக்கு இந்த விதமான பெர்மிசன்கள் தேவையில்லை. எனவே இந்த பிரச்சனையை உடனடியாக சரிசெய்துவிட்டோம். இந்த குழப்பத்திற்காக மன்னிப்பு கோருகிறோம்" என தெரிவித்துள்ளது பேஸ்புக்.

இந்த பாப்அப் திரையினால் பெரும்பாலான பயனர்கள் வருத்தத்தில் பல்வேறு இணையதளங்களில் தங்களின் துன்பத்தை பகிர்ந்துவருகின்றனர். பேஸ்புக் ஆண்ராய்டு செயலி தங்கள் ஆண்ராய்டு கருவியின் சூப்பர் யூசர் பர்மிசன்களை கேட்டதாக பயனர்கள் குற்றஞ்சாற்றுகின்றனர். இதற்கு முன்னதாக ஏற்கனவே பேஸ்புக் செயலி ரூட் பெர்மிசன்கள் கேட்டதாக சில பயனர்கள் கூறியதற்கு முன்பு இதெல்லாம் ஒன்றுமே இல்லை. ஆனால் தற்போது இந்த பிரச்சனை பரவலாக காணப்பட்டு, குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இது போன்ற பிரச்சனையை பயனர்கள் கூறியுள்ளனர். முதன்முதலில் பேஸ்புக் நிறுவனம் தனது 172.0.0.12.93 வெர்சன் ஆண்ராய்டு செயலியில் அட்மின் பெர்மிசன்களை கேட்டது. ஆனால் தற்போது 172.0.0.66.93. வெர்சனிலும் இதே பிரச்சனை காணப்படுவதாக கூறப்படுகிறது.


Powered by Blogger.