Wednesday, July 16 2025

கூகுளின் புதிய செயலி: ஆன்றாய்டு போனுக்குள் ஆராய்ச்சிக் கூடம்...!

நீங்கள்  குழந்தையா? அல்லது உங்கள் வீட்டில்  குழந்தைகள்  உள்ளனரா? அவர்களுக்கு இது கண்டிப்பாக கை கொடுக்கும். 



இது  குழந்தைகளுக்கான  கூகுள் நிறுவனத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்ட  அறிவியல் பூர்வமான ஒரு செயலி என்றே  கூறலாம். ஆம் சிறுவயது முதலே அறிவியல் ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு பயன்படுத்தும் விதமாக இருக்கும். இந்த செயலியின் பெயர் சைன்ஸ் ஜர்னல் என்பதே!   இந்த செயலியின் மூலம் மாணவர்கள் மற்றும் குழந்தைகள் செய்யக்கூடிய சிறிய ஆராய்ச்சிகளுக்கு  உதவும் வண்ணம் அன்றாட தகவல்களான ஒளி , ஒலி , வெப்பம் போன்றவற்றை அளந்து அவற்றை  குழந்தைகளுக்கு புரியும் வண்ணம்  சோதனை முடிவுகளை வரைபடத்தில் தரக்கூடியது. மேலும்  குழந்தைகளுக்கு இதனால் எந்தவித தீங்கும் இருக்காது. 

இதில் தேவையான சோதனைகளை எத்தனைமுறை வேண்டுமானாலும் நிகழ்த்திக் கொள்ளலாம்.  இது முற்றிலும் சிறுவயது ஆராய்ச்சியாளர்களை   ஊக்குவிதமாக உள்ளது.   சுருங்கக்  கூறின்  ஆன்றாய்டு  போனுக்குள் ஆராய்ச்சிக் கூடம் அமைந்துள்ளதைப் போன்றே!!
Powered by Blogger.