வாட்ஸ் ஆப் தகவல்களை கூகுள் ட்ரைவில் பேக் அப் செய்துவது எப்படி?
வாட்ஸ்ஆப் தகவல்களால் உங்கள் போனில் மொத்த மெமரியும் நிரம்பி விடுகிறதா? இனி அந்த கவலையை கூகுள் பார்த்துக் கொள்ளும்.
பொதுவாக கூகுள் டிரைவில் 15 ஜிபி அளவு வரை தான் தகவல்களை இலவசமாக
சேமிக்க முடியும். இதற்கு மேல் கூகுள் டிரைவில் இடம் பெற கட்டணம் செலுத்த
வேண்டும்.
ஆனால் வாட்ஸ் ஆப் தகவல்களை மட்டும் எவ்வளவு வேண்டுமானாலும்
சேமித்து கொள்ளலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் போன்
தொலைந்தாலோ புதிய போன் வாங்கினாலோ அந்த போனிலும் பேக் அப் மூலம் பழைய
தகவல்களை மீட்டெடுக்கலாம்.
கூகுள்- வாட்ஸ் ஆப் ஒப்பந்தம்:
கூகுள் நிறுவனத்துடன் வாட்ஸ் ஆப் செய்துள்ள ஒப்பந்த அடிப்படையில், வாட்ஸ் ஆப் தகவல்களை எவ்வளவு வேண்டுமாலும் கூகுள் டிரைவ் மூலம் பேக் அப் செய்து கொள்ளலாம். இதற்காக எந்த கட்டுப்பாடும் இருக்காது. போனில் மெமரியும் மிச்சாமகும், கூகுள் டிரைவில் மற்ற தகவல்களை சேமிக்க இடம் பிரச்னையும் இருக்காது.
கூகுள் நிறுவனத்துடன் வாட்ஸ் ஆப் செய்துள்ள ஒப்பந்த அடிப்படையில், வாட்ஸ் ஆப் தகவல்களை எவ்வளவு வேண்டுமாலும் கூகுள் டிரைவ் மூலம் பேக் அப் செய்து கொள்ளலாம். இதற்காக எந்த கட்டுப்பாடும் இருக்காது. போனில் மெமரியும் மிச்சாமகும், கூகுள் டிரைவில் மற்ற தகவல்களை சேமிக்க இடம் பிரச்னையும் இருக்காது.
ஒரு நிபந்தனை:
இதற்கு முன் கூகுள் டிரைவில் நீங்கள் பேக் அப் செய்திருந்தால், அதுவும் ஓராண்டு முன்னதாக செய்திருந்தால், நவம்பர் 1க்கு மீண்டும் பேக் அப் செய்ய வேண்டும். இல்லை என்றால் பழைய தகவல்கள் தானாக நீக்கப்படும்.
கவனிக்க:
பேக் அப்பை கூகுள் ட்ரைவில் எடுப்பதன்
முலம், போன் மெமரியில் சேமிக்கப்படுவது தவர்க்கப்படுமே தவிர, போனில்
சேமிக்கப்பட்ட வாட்ஸ் அப் படங்கள், வீடியோக்கள் நீக்கப்படாது. அவற்றை
நாம்தான் நீக்க வேண்டும்.
இதனால் என்ன பயன்:
புது போனில் வாட்ஸ் அப் செயலியை நிறுறுவும் போது பழைய போனில் இருந்த பேக் அப் செய்யப்பட்ட தகவல்களை இழக்காமல் பெறலாம்.
கூகுள் ட்ரைவுடன் வாட்ஸ் அப்பை எப்படி இணைப்பது?
1. வாட்ஸ் அப் செயலியை திறந்து, வலது மேல் பக்கம் உள்ள மூன்று புள்ளிகளை தொடவும்.
Settings > Chats > Chat Backup தேர்வு செய்யவும்.
2. கீழுள்ள Google Drive Settings-ல் Gmail ID உடன் இணைக்கப்பட்டுள்ளதா
என்பதை உறுதி செய்து கொள்ளவும். இல்லையென்றால், உள் நுழையவும். அது போல்,
எப்போது பேக் அப் எடுக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடவும்.
No comments: