ஸ்டைலஸ் பேனாவை மீண்டும் அறிமுகப்படுத்திய சாம்சங் கேலக்ஸி நோட் 9

 

Samsung Galaxy Note 9 Features: நியூயார்க் நகரில் நேற்று சாம்சங் கேலக்ஸி மாடலில் புதிய போனை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது சாம்சங் நிறுவனம்.
சாம்சங் S8ற்கு பின் சாம்சங் அறிமுகப்படுத்தும் ஹையர் எண்ட் ஸ்மார்ட்போன் இதுவாகும். அதனால் கேலக்ஸி நோட் 9ன் மீதான எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாக இருந்தன.
இந்த போனின் மிகப்பெரிய பலம் என்பது கேலக்ஸி நோட் 9 உடன் வரும் ஸ்டைலஸ் தான். S பேனா என்று அழைக்கப்படும் இந்த ஸ்டைலஸ் கேலக்ஸியை உபயோகப்படுத்தும் முறையையே மாற்றக்கூடிய திறன் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு மாற்றுக் கருத்தே இல்லை.

இந்த போனினை அறிமுகப்படுத்தி பேசிய சாம்சங் நிறுவனத் தலைவர் டி.ஜி.கோஹ் “ இது வெறும் திறன்பேசிகள் மட்டும் அல்ல. இது மனிதர்களின் நுண்ணறிவுக்கு ஈடு தரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.


சாம்சங் கேலக்ஸி நோட் 9 – ன் சிறப்பம்சங்கள் ( Samsung Galaxy Note 9 specifications)

பார்ப்பதற்கு மிகவும் இலகுவானதாக இருக்கும் இந்த போனின் வெளிப்புறத் தோற்றத்திற்கு மேலும் அழகு சேர்த்திருப்பது டைமண்ட் எட்ஜ் கட்டிங் ஆகும்.

S- ஸ்டைலஸ்ஸுடன் வரும் இந்த கேலக்ஸி நோட் 9ன் பின்பக்கத்தில் இரட்டைக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.  ஒரு வைட் கேமரா ஒரு டெலிபோட்டோ கேமரா என இரட்டைக் கேமராக்களுடன் வலம் வர இருக்கிறது இந்த போன். இரண்டு கேமராக்களின் திறனும் 12MP ஆகும்.

இதனுடைய பேட்டரித் திறன்  4000 mAh அதிவேக இண்டெர்நெட் வசதிகளை பெறும் அளவிற்கு இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 9 ( Samsung Galaxy Note 9 வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 1.2Gbps என்ற வேகத்தில் உங்களால்  டேட்டாக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 9 சேமிப்புத் திறன்

இரண்டு வேறுபட்ட சேமிப்புத் திறனுடன் வருகிறது சாம்சங் கேலக்ஸி நோட் 9. 128GB இண்டர்நெல் ஸ்டோரேஜ்ஜுடன் கூடிய 6GB RAM போனின் விலை 999 அமெரிக்க டாலர்களாகும்.

512GB இண்டர்நெல் ஸ்டோரேஜ்ஜுடன் கூடிய 8GB RAM போனின் விலை சுமார் 1249 டாலர்களாகும்.

512ஜிபி உடன் கூடிய மெமரி கார்டினையும் தயாரித்து இந்த போனுடன் தர இருக்கிறது சாம்சங் நிறுவனம்.


No comments:

Powered by Blogger.