Thursday, May 22 2025

உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களின் ஐ.பி. முகவரியை டிராக் செய்வது எப்படி?

இணையத்தில் அலுவல் ரீதியிலான தகவல் பரிமாற்றத்துக்கு முக்கிய சேவையாக மின்னஞ்சல் இருக்கிறது. தகவல் பரிமாற்றம் தவிர, நண்பர்களுடன் உரையாடல், அல்லது மற்றபடி அனைத்து வித தகவல் பரிமாற்றத்துக்கும் மின்னஞ்சல் அவசியமான ஒன்றாக இருக்கிறது.


பல்வேறு நன்மைகள் இருக்குமிடத்தில் கோளாறுகள் இருப்பது தவரிக்க முடியாத ஒன்று தான். இன்பாக்ஸ்-ஐ சுத்தம் செய்வது சிறிது நேரம் தான் ஆகும். எனினும் உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை அனுப்பியவர் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் இருக்கும். மின்னஞ்சல்களை யார் அனுப்பினார்கள் என்பதை டிராக் செய்ய வேண்டும் எனில், மின்னஞ்சல் தலையங்கத்தில் பார்க்க வேண்டும். 
மின்னஞ்சல் முகவரியை டிரேஸ் செய்வது 
உங்களுக்கு வரும் மின்னஞ்சல் மற்றும் அதை உங்களுக்கு அனுப்பியரின் மின்னஞ்சல் ஐடியில் ரூட்டிங் தகவல்கள் மற்றும் மின்னஞ்சலின் மெட்டா டேட்டா இடம்பெற்றிருக்கும். பெரும்பாலான மின்னஞ்சல் சேவைகளில் முழு மின்னஞ்சலின் தலையங்கத்தை வழக்கமாக டிஸ்ப்ளே செய்யவதில்லை என்றாலும், அவற்றை சரிபார்க்கும் வசதிகளை வழங்குகின்றன. 
ஜிமெயில் முழு தலையங்கம்: நீங்கள் டிரேஸ் செய்ய வேண்டிய மின்னஞ்சலை இயக்கவும். பின் வலதுபுறம் இருக்கும் டிராப்-டவுன் மெனு சென்று Show original ஆப்ஷனை க்ளிக் செய்யவும். 
அவுட்லுக் முழு தலையங்கம்: நீங்கள் டிரேஸ் செய்ய வேண்டிய மின்னஞ்சலை க்ளிக் செய்து, பின் File > Properties ஆப்ஷன் செல்லவும். இங்கு internet headers ஆப்ஷனில் நீங்கள் விரும்பும் தகவல் இருக்கும். 
ஆப்பிள் மெயில் முழு தலையங்கம்: நீங்கள் டிரேஸ் செய்ய வேண்டிய மின்னஞ்சலை க்ளிக் செய்து, View > Message > Raw Source ஆப்ஷன்களை க்ளிக் செய்யவும். 
சில மின்னஞ்சல் சேவைகள் இங்கு பட்டியலிடப்பட்டு இருக்கும். ஆன்லைனில் தேடும் போது சில சேவைகளின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.


தலையங்கத்தில் உள்ள முழு விவரங்கள் 

ரூட்டிங் விவரங்களை பட்டியல் அடிப்படையில் பார்க்க முடியும் அவை, 
• ரிப்ளை -டு (Reply-To) 
• ஃபிரம் (From) 
• கன்டென்ட் டைப் (Content type) 
• எம்.ஐ.எம்.இ.-வெர்ஷன் (MIME-Version) 
• சப்ஜெக்ட் (Subject) 
• டு (To) 
• டி.கே.ஐ.எம்-சிக்னேச்சர் (DKIM-Signature) 
• ரிசீவ்டு (Received) 
• ஆத்தென்டிகேஷன்-ரிசல்ட்ஸ் (Authentication-Results) 
• ரிசீவ்டு-எஸ்.பி.எஃப் (Received-SPF) 
• ரிட்டன்-பாத் (Return-Path) 
• ஏ.ஆர்.சி.-ஆத்தென்டிகேஷன்-ரிசல்ட்ஸ் (ARC-Authentication-Results) 
• ஏ.ஆர்.சி.-மெசேஸ்-சிக்னேச்சர் (ARC-Message-Signature) 
• ஏ.ஆர்.சி.-சீல் (ARC-Seal) 
• எக்ஸ்-ரிசீவ்டு (X-Received) 
• எக்ஸ்-கூகுள்-ஸ்டம்ப்-சோர்ஸ் (X-Google-Smtp-Source) 
• டெலிவர்டு டு (Delivered-To)

உண்மையில் மின்னஞ்சல் அனுப்பியவர் மின்னஞ்சல் அனுப்பியவரின் உண்மையான ஐ.பி. முகவரியை கண்டறிய,
நீங்கள் முதலில் ரிசீவ்டு ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். உங்களுக்கு வந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்ட சர்வெரின் ஐ.பி. முகவரி ரிசீவ்டு லைனின் முதல் கோட்டில் இருக்கும். இது X-Originating-IP அல்லது Original-IP வடிவில் இருக்கும். 
ஐ.பி. முகவரியை டிரேஸ் செய்யஸ நீங்கள் எம்.எக்ஸ் டூல்பாக்ஸ் (MX Toolbox) பயன்படுத்தலாம். பெட்டியில் ஐ.பி. முகவரியை பதிவிட வேண்டும், டிராப் டவுன் மெனு தேடலில் Reverse Lookup என டைப் செய்து பின் என்டர் பட்டனை க்ளிக் செயய்வும். இங்கு சர்வெர் சார்ந்து அதிகப்படியான விவரங்களை பார்க்க முடியும்.

தலையங்க ஆய்வு மற்றும் ஐ.பி. டிரேசர்கள் அனைத்து தலையங்ககள் சார்ந்த விவரங்களை அறிந்து கொள்ளும் வழிமுறையை பின்பற்ற பொறுமை இல்லை எனில் இதற்கென கிடைக்கும் மென்பொருள்களை பயன்படுத்தலாம். 

- ஜிசூட் டூல்பாக்ஸ் மெசேஜ் ஹெடர் 
- எம்.எக்ஸ். டூல்பாக்ஸ் இமெயில் ஹெடர் அனலைசர் 
- ஐ.பி. அட்ரெஸ் இமெயில் ஹெடர் டிரேஸ் 

இந்த சேவைகளை பயன்படுத்தும் போது சரியான பதில்கள் கிடைக்குமா என்பதை உறுதியாக கூற முடியாது.

Powered by Blogger.