பல்வேறு கான்டாக்ட்களை ஐபோனில் அழிப்பது எப்படி?
ஐபோனின் கான்டாக்ட்ஸ் ஆப் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க மாற்றங்களை
சந்திக்கவில்லை எனலாம். ஆப் இன்டர்ஃபேஸ் பயன்படுத்தக்கூடிய வகையில்
எளிமையாக இருந்தாலும், அதிக கான்டாக்ட்களை ஒரே சமயத்தில் அழிப்பது சில
சமயங்களில் கடினமாகி விடும்.
ஆனால் ஐகிளவுட் மற்றும் ஐடியூன்ஸ் கொண்டு ஒரே சமயத்தில் அதிக கான்டாக்ட்களை
அழிக்க முடியும் என உங்களுக்கு தெரியுமா? இதை எவ்வாறு செய்ய வேண்டும்
என்பதை தொடர்ந்து பார்ப்போம்:
முதலில் செய்ய வேண்டியவை:
- நீங்கள் அப்டேட் செய்யப்பட்ட ஐடியூன்ஸ் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
- உங்களின் ஐகிளவுட் கான்டாக்ட் சின்க் ஆன் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- சீராக வேலை செய்ய இணைய இணைப்பு.
வழிமுறை 1:
ஐகிளவுட் வலைத்தளம் பயன்படுத்துவது:
1. முதலில் 'www.icloud.com' வலைத்தளத்திற்கு பிரவுசர் மூலம் உங்களது கம்ப்யூட்டர் அல்லது மேக் மூலம் செல்ல வேண்டும்.
2. உங்களது ஐடி மற்றும் பாஸ்வேர்டு மூலம் லாக் இன் செய்ய வேண்டும்.
3. இனி, கான்டாக்ட்ஸ் ஐகானை க்ளிக் செய்யவும்.
4. நீங்கள் அழிக்க வேண்டிய கான்டாக்ட்களை தேர்வு செய்து கீபோர்டில் உள்ள டெலீட் பட்டனை க்ளிக் செய்யவும்.
5. டெலீட் பட்டனை க்ளிக் செய்ததும் உறுதி செய்யக்கோரும் ஆப்ஷன் வரும், அதனை உறுதி செய்தால் வேலை முடிந்தது.
வழிமுறை 2:
மூன்றாம் தரப்பு செயலிகள்
ஆப்ஸ்டோரில்
கிடைக்கும் மூன்றாம் தரப்பு செயலிகளை கொண்டும் இந்த வேலையை செய்து முடிக்க
முடியும். அவ்வாறானவற்றை செய்ய AnyTrans, Cleaner Pro, Delete contacts+
செயலிகள் பிரபலமானதாக அறியப்படுகின்றன.
வழிமுறை 3:
மேக் பயன்படுத்துவது:
ஐபோன்
மற்றும் ஐபேடில் உள்ள கான்டாக்ட்ஸ் ஆப் போன்று இல்லாமல் மேக் வெர்ஷன் அதிக
கான்டாக்ட்களை தேர்வு செய்து ஒரே சமயத்தில் அவற்றை அழிக்க வழி செய்கின்றன.
1. முதலில் 'System Preference' ஆப்ஷனை க்ளிக் செய்ய ஐகிளவுட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
2. உங்களது விவரங்களை பதிவிட்டு சைன்-இன் செய்ய வேண்டும், பின் கான்டாக்ட் சின்க் ஆப்ஷனை சரிபார்க்க வேண்டும்.
3. இனி மேக் கம்ப்யூட்டரில் உள்ள 'Contacts' செயலியை திறக்க வேண்டும்.
4. கமான்ட் பட்டனை அழுத்தியபடி நீங்கள் அழிக்க வேண்டிய கான்டாக்ட்களை தேர்வு செய்ய வேண்டும்.
5. ரைட் க்ளிக் செய்து 'Delete Cards' ஆப்ஷனை க்ளிக் செயய்வும்.
6. டெலீட் ஆப்ஷனை உறுதி செய்து தேர்வு செய்யப்பட்ட கான்டாக்ட்களை அழிக்கலாம்.
7. நீங்கள் செய்த மாற்றத்தை உங்களின் ஐபோனில் சின்க் ஆகும் வரை காத்திருக்கவும்.




No comments: