ஆப்பிள் ios 12 அப்டேட் செய்வது எப்படி?
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன், ஐபேட் மற்றும் ஐபோட் ஆகியவற்றுக்கு
ஐஒஎஸ்12 என்ற அப்டேட்டை செய்துள்ளது என்பது ஆப்பிள் பயனாளிகளுக்கும்
ஆப்பிள் குறித்த செய்திகளை பின்பற்றுபவர்களுக்கும் தெரிந்திருக்கும்.
செப்டம்பர் 17ஆம் தேதி இந்த அப்டேட்டை ஆப்பிள் நிறுவனம் செய்துள்ளது. இந்த
ஓஎஸ் கடந்த ஜூன் மாதம் நடந்த WWDC 2018 மாநாட்டில் ஆப்பிள் நிறுவனம்
அறிமுகம் செய்தது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த ஓஎஸ் ஐபோன் 5எஸ் மற்றும் ஐபேட் மினி 2 உள்பட அனைத்து ஆப்பிள்
நிறுவனத்தின் சாதனங்களுக்கும் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது
என்பதே இதன் சிறப்பு. மேலும் இந்த ஒஏஸ்-ஐ டவுன்லோட் செய்வதும் மிக
எளிதானது. இந்த புதிய ஐஒஎஸ் வெர்ஷனை எப்படி டவுன்லோடு செய்ய வேண்டும்
என்பது குறித்த வழிமுறைகளை தற்போது பார்ப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் தனது ஒஎஸ் வடிவத்தை மாற்றும்போது
நோட்டிபிகேசன் மூலம் தெரிவிப்பது வழக்கம். மேலும் இந்த புதிய ஓஎஸ் வடிவத்தை
டவுன்லோடு செய்யும் முன்னர் உங்கள் ஐபோனில் உள்ள அனைத்து டேட்டாக்களையும்
பேக்கப் செய்து கொள்ள வேண்டும் என்பது முக்கியமான ஒன்று.
ஸ்டெப் 1: முதலில் செட்டிங் சென்று அதன் பின்னர் ஜெனரல் மற்றும் சாப்ட்வேர்
அப்டேட் செல்லவும்.
ஸ்டெப் 2: அதன்பின்னர் அதில் உள்ள டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் சென்று
அதன்படி செய்யவும்.
ஸ்டெப் 3: டவுன்லோடு செய்து முடித்த பின்னர் 'இன்ஸ்டால் அண்ட் அக்ரி
குறித்த ஒப்பந்தங்கள் என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: அதன்பின்னர் உங்கள் சாதனத்தில் இன்ஸ்டால் பிராசஸ் தொடங்கிவிடும். இந்த டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் பிராசஸ் உங்கள் சாதனம் மற்றும்
இண்டர்நெட் கனெக்சனை பொருத்து நேரம் வித்தியாசப்படும். இருப்பினும் வைபை
கனெக்சன் மூலம் டவுன்லோடு செய்வது நன்று.

உங்கள் அருகில் உள்ள கம்ப்யூட்டரை ஆன் செய்யவும். அந்த கம்ப்யுட்டரில்
ஐடியூனை ஓப்பன் செய்து அதன்பின் இதனை பின்பற்றவும்.
ஸ்டெப் 1: டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் முதல் ஐடியூனை ஒப்பன் செய்து அதன்
பின்னர் உங்கள் ஐஒஎஸ் சாதனைத்தை அத்துடன் இணைக்கவும்.
ஸ்டெப் 2: மேல் பகுதியில் உங்கள் சாதனம் இணைக்கப்பட்டிருப்பதை ஒரு ஐகான்
மூலம் தெரிந்து கொள்ளலாம். உடனே அதனை க்ளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: அதன் பின்னர் சம்மரி டேப்பில், 'செக் அண்ட் அப்டேட்' என்பதை
க்ளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: அதன்பின்னர் டவுன்லோடு செய்து பின் அப்டேட் செய்யவும்.
ஸ்டெப் 5: அதன் பின்னர் ஒருசில குறிப்புகள் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில்
தோன்றும், அதனை பின்பற்றினால் தற்போது உங்கள் சாதனத்தில் ஐஒஎஸ் 12 ரன்
ஆகிவிடும்.