எப்படி உங்கள் பேஸ்புக் அக்கௌன்ட்டில் இருந்து செல்போன் எண்ணை அகற்றுவது.!
டெக் கிரன்ச் நடத்திய ஆய்வின் படி பேஸ்புக் நிறுவனம், பேஸ்புக் பயனர்களின்
தொலைப்பேசி எண்களை அவர்களுக்குத் தெரியாமலே பயன்படுத்துகின்றது என்று அந்த
அறிக்கையின் ஆய்வு சொல்கிறது. பேஸ்புக் நிறுவனத்தின் ஆதாயத்திற்காக வேறொரு
பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகிறதென்பது தெரியவந்துள்ளது.
பேஸ்புக் இல் நாம் அனைவர்க்கும் அக்கௌன்ட் இருக்கும். வாட்ஸ் ஆப் எப்படி
அனைவரும் பயன்படுத்தும் செயலி ஆகிவிட்டது அதே போன்று தான் பேஸ்புக்
செயலியும் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது.
இரண்டாம் நிலை பாதுகாப்பு
பேஸ்புக் நிறுவனம்
தனது பயனர்களின் எண்களை இரண்டாம் நிலை பாதுகாப்பு முறையின் கீழ்
வைத்துள்ளது என்பது நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் நாம்
அனைவருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், நம்முடைய தனி நபர் மொபைல்
எண்கள் இலக்கு விளம்பரங்களை விளம்பரப் படுத்துவதற்காக, பேஸ்புக் நிறுவனம்
மூலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பேஸ்புக் அக்கௌன்ட்
உங்கள் பேஸ்புக் அக்கௌன்ட் இல் இருந்து உங்களின் மொபைல் எண்ணை நீக்க நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும் தான்.
செயல்முறை:
- உங்களின் பேஸ்புக் அக்கௌன்ட் இல் வலது மேல் மூலையில் உள்ள 3 கோடுகளை கிளிக் செய்யுங்கள்.
- அந்தப் பக்கத்தின் கீழ் சென்று செட்டிங்ஸ் & பிரைவசி கிளிக் செய்யுங்கள்.
- இப்பொழுது ப்ரொபைல் செட்டிங்ஸ்க்கான லோகோ அருகில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்யுங்கள்.
- அக்கௌன்ட் செட்டிங்ஸ் சேவைக்கு கீழ் இருக்கும் பர்சனல் இன்பர்மேஷன் கிளிக் செய்யுங்கள்.
- போன் நம்பர் என்ற பாக்ஸை கிளிக் செய்யுங்கள்.
- உங்களின் போன் நம்பர் செலக்ட் செய்து ரிமூவ் ஆப்ஷன் கிளிக் செய்யுங்கள்.
- உங்கள் பேஸ்புக் பாஸ்வோர்டு டைப் செய்து ரிமூவ் போன் கிளிக் செய்யுங்கள்.
இறுதி கட்ட செயல்முறை:
- செட்டிங்ஸ் கீழ் உள்ள செக்யூரிட்டி & லாக்இன் கிளிக் செய்யுங்கள்.
- செட்டிங் அப் எக்ஸ்ட்ரா செக்யூரிட்டி கீழ் உள்ள டூ ஃபாக்டர்
ஆதென்டிகேஷன் கிளிக் செய்யுங்கள்.
- கெட் ஸ்டார்ட்டட் கிளிக் செய்யுங்கள்.
Two Factor Authentication
Two Factor Authentication முறைப்படி உங்களுக்கான ஆதென்டிகேஷன் கோடு எண் வழங்கப்பட்டும்.
வழங்கப்பட்ட எண்ணைப் உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட இல் என்டர் செய்து,
உங்களின் பழையமொபைல் எண்ணை நீக்கிக் கொள்ளுங்கள்.