Wednesday, July 23 2025

இன்ஸ்டாகிராம் செயலியில் மிகவும் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.!

இன்ஸ்டாகிராம் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை சேர்க்கும் வண்ணம் உள்ளது, அதன்படி டைரக்டரி போன்று வேலை செய்யும் அம்சம் மற்றும் நேம்டேக்ஸ் அம்சம் என்ற இரண்டு அம்சங்களை கொண்டுவந்துள்ளது. இந்த அம்சம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.


இன்ஸ்டாகிராம் கொண்டு வந்துள்ள நேம்டேக்ஸ் என்ற அம்சம் பொறுத்தவரை, பயனர் விரும்பும்படி மாற்றிக் கொள்ளக்கூடிய கிராஃபிக்ஸ் படங்கள் ஆகும்,இந்த அம்சம் கியூ.ஆர் என்ற கோடுகளை அடிப்படையாக கொண்டு வேலை செய்கின்றன.
குறிப்பாக செயலியினுள் இவற்றை ஸ்கேன் செய்ததும், பயனர் குறிப்பிட்ட பயனரின் ப்ரோஃபைலுக்கு நேரடியாக செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.


பின்பு பயனர்கள் நேம்டேக் நிறம், எமோஜி அல்லது புகைப்படம் உள்ளிட்டவற்றை சேர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அம்சத்தை இன்-ஆப் கேமரா மூலம் ஸ்கேன் செய்யவோ அல்லது நேம்டேக் வியூ பட்டனை கிளிக் செய்து பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்ஸ்டாகிராம் கொண்டுவந்துள்ள அடுத்த அம்சம் என்னவென்றால் டைரக்டரி போன்று வேலை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த அம்சம் பயனர்களை அவரவர் படித்த கல்லூரிகளின் அடிப்படையில் பிரிக்கிறது.
அதன்படி மாணவர்கள் தங்களது நண்பர்களை இன்ஸ்டாகிராமில் கண்டறிய இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.
Powered by Blogger.