வாட்ஸ் ஆப் ஸ்டிக்கர்: உங்க போட்டோவை ஸ்டிக்கரா அனுப்பலாம்.! எப்படினு தெரிஞ்சுக்கோங்க.!
வாட்ஸ் ஆப் பயனர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த வாட்ஸ் ஆப்
ஸ்டிக்கர் சேவை தற்பொழுது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள புதிய அப்டேட் இல் இந்த சேவை இணைக்கப்பட்டுள்ளது.
இந்த வாட்ஸ் ஆப் ஸ்டிக்கர் சேவையில், வாட்ஸ் ஆப் நிறுவனம் 12 வித்தியாசமான
ஸ்டிக்கர் பேக்களை இலவசமாக வழங்கியுள்ளது. அதிகப்படியான ஸ்டிக்கர்கள்
வேண்டும் என்று விரும்புபவர்கள் ஸ்டிக்கர் பேக்கில் உள்ள ''பிளஸ்" ஐகான்னை
கிளிக் செய்தால் போதும்.
கூகுள் பிளே ஸ்டோர்
கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள மற்ற நிறுவனத்தின் ஸ்டிக்கர் ஆப்களின் மூலம் உங்களுக்குப் பிடித்த ஸ்டிக்கர்களை டவுன்லோட் செய்து பயன்படுத்திக்கொள்ளும் சுதந்திரத்தையும் வாட்ஸ் ஆப் நிறுவனம் வழங்கியுள்ளது.புகைப்பட ஸ்டிக்கர்
வாட்ஸ் ஆப் ஸ்டிக்கர் சேவையின் கூடுதல் சிறப்பாக, உங்களுக்கு பிடித்தமான
ஸ்டிக்கர்களை நீங்களே உருவாக்கி உங்களின் நபர்களுடன் பகிர்ந்துகொள்ளும்
வாய்ப்பையும் வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக,
உங்களின் புகைப்படத்தை கூட ஸ்டிக்கர் வடிவில் உருவாக்கி அதை வாட்ஸ் ஆப்
மூலம் பகிர்ந்துகொள்ளலாம்.
செயல்முறை:
உங்கள் சிந்தனைக்கு ஏற்ப வாட்ஸ் ஆப் ஸ்டிக்கர்களை உருவாக்குவது எப்படி
என்று பார்க்கலாம்.
- உங்களின் கூகுள் பிளே ஸ்டோர் சென்று "ஸ்டிக்கர் மேக்கர் ஃபார் வாட்ஸ்
ஆப்" என்ற செயலியை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.
- ஸ்டிக்கர் மேக்கர் ஃபார் வாட்ஸ் ஆப் செயலியை ஓபன் செய்து "க்ரியேட் நியூ
ஸ்டிக்கர் பேக்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
- உங்கள் ஸ்டிக்கர் பேக்கிற்கு பெயர் மற்றும் தொகுத்தவரின் பெயரைக்
கொடுங்கள்.
- இந்த தனிப்பட்ட பெயர் சேவையினால் உங்களின் தனிப்பட்ட ஸ்டிக்கர் பேக்கள்
வேறு நபர்களால் அணுகாமல் பாதுகாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- நியூ லிஸ்ட் ஆப்ஷன் கிளிக் செய்து, எம்ட்டி ஸ்டிக்கர் ட்ரே கிளிக் செய்து
கொள்ளுங்கள்.
- உங்களின் ஸ்டிக்கர் உருவாக்க புதிய புகைப்படம் எடுக்க விரும்புகிறீர்களா
அல்லது உங்களின் கேலரி இல் இருந்தே புகைப்படத்தை
தேர்ந்தெடுத்துக்கொள்கிறீர்களா என்று ஆப்ஷன் வரும்.
- உங்களின் விருப்பத்தைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- உங்களுக்குப் பிடித்த புகைப்படத்தை கிளிக் செய்து, விரலால் சுற்று
வரைந்து உங்களுக்குத் தேவையான இடத்தைமட்டும் தேர்வு செய்துகொள்ளுங்கள்.
- இறுதியாக சேவ் ஆப்ஷனை கிளிக் செய்து, நீங்கள் உருவாக்கிய ஸ்டிக்கரை
வாட்ஸ் ஆப் செயலில் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
- இதே போல் இன்னும் பல ஸ்டிக்கர்களை உருவாக்கி உங்களின் ஸ்டிக்கர் பேக் இல்
சேவ் செய்துகொள்ளுங்கள்.
இந்தப் பிரத்தியேக தனிப்பட்ட ஸ்டிக்கர் உருவாக்கச் சேவை, ஆண்ட்ராய்டு
பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
woooow
ReplyDelete👍👍👍
Delete