Monday, July 14 2025

University of Vocational Technology - UNIVOTEC

Univotec! Univotec! Univotec!



* பரவலாக தெரிந்த இந்த பெயர்தான் என்ன?
* இது ஒரு கல்வி கூடம் என்று தெரிந்த பலருக்கு எப்படியான கல்வி வழங்கப்படுகிறது என்ற அறிவு உள்ளதா?
* இதன் பெறுமதிதான் என்ன?
* இது ஏன் மக்களிடம் பரவலாக செல்லவில்லை? அவனது அறியாமையின் காரணம் என்ன?
                      பதில் தறுகிறேன் அங்குள்ள ஒரு மாணவனாய்.

ஆரம்ப கட்டமைப்பிலேயே தொடங்குகிறது இதன் பிரச்சனை #Univotec இந்த வார்தை பெறும்பாலானோர் அறிந்திறுப்பார்கள் "ஒரு தொழிநுட்ப கல்லூரி" என்று ஏனெனில் இதன் முடிவு #Tec என்று இருப்பதனால் என்னவோ ஆனால் அதன் உண்மையான தெளிவான விளக்கத்தை தருகிறேன்.

"University of Vocational Technology"
Uni+Vo+Tec= Univotec 

ஆம் இது ஒரு #பல்கலைகழகம்.
அதுவும் இலங்கைக்கு என்றே உரித்தான ஒரே ஒரு தொழிநுட்ப பல்கலைகழகம் என்றால் மிகையாகாது.

அனைத்து பல்கலைகழகங்களை போன்றதொரு அரசாங்கத்தினுடைய பல்கலைகழகம் தான் இது.

இதன் புகழ்,பெறுமதி தெரியாமல் இருக்க காரணம் இதன் குறைகள் இல்லை
இதன் தனித்துவமே தலையான காரணம்.

அவற்றை வரிசைப்படுத்துகிறேன் பாருங்கள்.

1. இது அமைந்திருப்பது தனி அமைச்சின் கீழ் (Ministry of Skill development and Vocational training) என்ற தனித்துவம் வாய்ந்த , வேறு பல்கலைகழகங்கள் உள்வாங்கப்படாத தனியானதொரு அமைச்சின் கீழ் இருப்பதானால் இதன் பெறுமதி மக்களிடம் சேரவில்லை என்பது மிக முக்கியமானதொரு விடயமாகும்.

குறிப்பு இதன் அமைச்சர் இலங்கை நாட்டின் வரலாறு பேசும் பிரதமரான
திரு. ரணில் விக்ரம சிங்க என்றால் நம்பவா முடிகிறது. ஆம் அவரேதான் இவ் அமைச்சிக்கு பொறுப்பானவர்.

2. இந்த பல்கலைகழக பட்டமானது (Degree) மற்றைய பல்கலைகளகங்களை விட முற்றிலும் மாறுபட்டதொரு Degree யாக உள்ளது என்பதும் இதன் பெயர் தெரியாதிருக்க காரணமாகும்.

அது Bachelor of Technology (B.Tech) எனும் Degree வளங்கும் தனித்துவமான அரசாங்க பல்கலைகழகம் என்பதனால் இதன் புகழ் பெறுமதி மக்களுக்கு தெரிய மறுக்கிறது.

காரணம் இலங்கை என்றாலே #Bsc எனும் வகை Degree தான் பெறுமதி என்ற அறியாமையே இதன் மற்றுமொரு காரணம்.

3. இது அனேகமானவர்களால் ஒரு பல்கலைகழகம் என தெரியாமல் போக காரணம் இங்கு A/l எனும் Advance Level தொழிநுட்ப மாணவர்களை உள்வாங்குவதுடன் NVQ (National Vocational Qualification) எனும் A/l மாணவர்களை காட்டிலும் பல வகையில் தனிப்பட்ட சிறப்பை கொண்ட NVQ 5,6 (Diploma) முடித்த மாணவர்களையும் இது உள்வாங்குவதனாலேயே இது ஒரு பல்கலைகழகம் என்ற உண்மைதன்மை மக்களை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கு தடையாக அமைகிறது.

காரணம் "மக்களின் அறியாமை , எம்நாட்டின் வழக்கம்" A/level முடித்தவர்களால் மாத்திரம்தான் பல்கலைகழகம் செல்ல முடியும் என்ற அறியாமையே முதல். இந்த அறியாமையில் இருந்த நீங்க முயற்சி செய்ய வேண்டும்.

A/level எனும் கல்விதரத்திலும் பார்க்க பல மடங்கு திறமைகளையும் தனிப்பட்ட சிறப்புக்களையும் கொண்டவர்கள் NVQ கற்கை நெறியை மேற்கொள்பவர்கள் அம் மாணவர்கள் என்பது யாவரும் அறிந்திடாத உண்மையாகும்.

அப்படிப்பட்ட திறமையானவர்களுக்காக ஆரம்பித்த பல்கலைகழகம்  தற்போது தொழிநுட்பம் எனும் Advance level பாட மாணவர்களில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களையும் உள்வாங்குகிறது என்பது சந்தோசமானதொரு விடயமாகும்.

பல்கலைகழக மாணவர்களுக்கு தெரியும் #credit என்றால் என்னவென்று ஒவ்வொரு பல்கலைகழகமும் தனிப்பட்ட creditஐ கொண்டு காணப்படும் அதன் அளவின் எண்ணிக்கைக்கு ஏற்ப அப்பல்கலைகழக Degree யினது தரம் உயர்வாக இருக்கும்

அதனடிப்படையில் எங்களது பல்கலைகழக credit எண்ணிக்கை #180. ஆம் இலங்கையில் அதி கூடிய Creditஐ கொண்ட பல்கலைகழகங்களுல் எங்களது பல்கலைகழமான "University of Vocational technology" உம் ஒன்று.

அதுமட்டும் இல்லை இங்கு மூன்று கற்கை நெறிகள் #பொறியியல் கற்கை நெறிகளாக காணப்படுகிறது.
1.Building Services Technology
2.Mechatronics Technology
3. Manufacturing Technology
எனும் கற்கைநெறிகளாகும்.

ஏனைய கற்கைநெறிகள் முற்றிலும் வித்தியாசமான பெயர்களுடன் உலக சந்தைக்கு ஏற்ப பெறுமதிவாய்ந்த கற்கைநெறிகளை கொண்ட இது பல சிறப்புகளை கொண்ட பல்கலைகழகம் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை.

அதுதான் எங்கள் University of vocational technology உங்களது பாசையில் " Univotec " இவ்வளவு சிறப்புக்கள் இருந்தும் இது ஏன் மக்களிடம் போய் சேரவில்லை எனும் கேள்வி உங்களுக்கு மட்டும் இல்லை எனக்கும் அதிக தடவைகள் எழுந்துள்ளது. காரணம்

1. அறகுறையாக இதை தெரிந்து கொண்டு மக்களிடம் சரியான உண்மையை கொண்டு போய் சேர்க்க தவறிய கல்வி ஜீவன்கள்.
2. இது பற்றிய அடிப்படை அறிமுகமும் அறிவும் இல்லாத புகழ்வாய்ந்த பாடசாலைகள்.
3. இது ஆரம்பித்து தற்போதுதான் 10ஆவது ஆண்டை பூர்த்தி செய்த புதியதொரு பல்கலைகழகம் என்பதனால்
4. இது அமைந்துள்ள இடம் புகழ்வாய்ந்த பல்கலைகழகங்களான
University of Moratuwa,
Sir.John kothalawa defense University
போன்ற பல்கலைகழகம் அமைந்துள்ள இடப்பரப்பில் இருப்பதனால் இதை தனித்துவப்படுத்துவது சிரமமாக இருப்பதனால்.
5. சிங்கள மொழி பேசும் மக்கள் பெரும்பான்மை உள்ள காரணத்தாலும் நம் தமிழ் பேசும் பட்டதாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனாலும் இதன் தெளிவு விழிப்பு மக்களை சென்றடைய தவறியதும் மிக முக்கிய காரணங்களாகும்.

இப்படிப்பட்ட ஒரு பல்கலைகழகம் இலங்கையில் இருப்பது இதை வாசிக்கும் போதுதான் சிலர் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.
எனவே நாமும் எமது சமூகத்தில் பட்டதாரிகளினது எண்ணிக்கையை அதிகரிக்க இச்செய்தியினை அதிகம் அதிகம் பகிருவோம்.
பலரது வாழ்கை ? கேள்விக்குறியாக அமைய எம் சமூகத்தின் அறியாமை மிக மிக முக்கியமானதொரு காரணமாக இருப்பதனால் இதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்.
தொடரும்.........

நன்றி.
#Inamullah



Powered by Blogger.