Sunday, May 11 2025

என்ன செய்தும் ஃபேஸ்புக் அக்கவுண்ட் லாக் இன் ஆகாத பட்சத்தில் இதை செய்து அக்கவுண்ட்டை ரிக்கவர் செய்யலாம்

ஃபேஸ்புக் சேவையை பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது என்றே கூறலாம். சிலர் ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடினை தினமும் ஒருமுறையேனும் ஸ்கிரால் செய்வர், சிலர் எப்போதாவது ஒருமுறை ஃபேஸ்புக் பயன்படுத்த நினைப்பர். இதில் நீங்கள் எப்படி ஃபேஸ்புக் சேவையை பயன்படுத்தினாலும், சில சமயங்களில் பாஸ்வேர்டு மறந்துவிட்டாலோ அல்லது ஏதேனும் காரணங்களால் ஃபேஸ்புக் சேவையில் லாக் இன் செய்ய முடியாத சூழல் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. இதுபோன்ற காலக்கட்டங்களில் உங்களது ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை மீண்டும் ரிக்கவர் செய்ய பல்வேறு வழிகளை ஃபேஸ்புக் வழங்குகிறது. 


அவ்வாறு உங்களது ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை ரிக்கவர் செய்வதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:


 ஒருவேளை வேறு ஏங்கேயும் லாக் செய்திருந்தால் உங்களது ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் போன்றவற்றில் எங்கேயும் லாக் இன் செய்திருந்தால் உறுதி செய்வதற்கான ரீசெட் கோடு இல்லாமல் பாஸ்வேர்டை பெறலாம். ஃபேஸ்புக் சேவையில் டு-ஸ்டெப் ஆத்தென்டிகேஷன் கோடு செட்டப் செய்வது இதுபோன்ற சூழல்களில் சிறப்பானதாக இருக்கும்.


டீஃபால்ட் அக்கவுண்ட் ரிக்கவரி ஆப்ஷன்கள் முந்தைய வழிமுறை வேளை செய்யாத பட்சத்தில் ரிக்கவரி ஆப்ஷன்களை பயன்படுத்தலாம். நெட்வொர்க் அல்லது நீங்கள் ஏற்கனவே லாக் இன் செய்திருந்த கம்ப்யூட்டரை பயன்படுத்தலாம். ஃபேஸ்புக் ரிக்கவர் பக்கத்திற்கு சென்று உங்களது மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் போன் நம்பரை பதிவிட வேண்டும். இவ்வாறு நீங்கள் பதிவிடும் மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் போன் நம்பர் ஏற்கனவே நீங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் சேர்த்திருக்க வேண்டியது அவசியமாகும். 

இல்லையெனில் உங்களின் பயன்பாட்டு பெயரையும் பதிவிடலாம். உங்களது ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை கண்டறிந்ததும், உங்களது ப்ரோஃபைலினை நீங்கள் பார்க்கலாம். எனினும் இவ்வாறு செய்யும் முன், அது உங்களின் அக்கவுண்ட் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இத்துடன் உங்களது மின்னஞ்சல் முகவரியை உங்களால் இயக்க முடியுமா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளவும். 

இனி Continue ஆப்ஷனை க்ளிக் செய்ததும் உங்களுக்கு பாதுகாப்பு குறியீடு கிடைக்கும். ஒருவேளை கிடைக்காத பட்சத்தில் நீங்கள் Didnt get a code ஆப்ஷனை க்ளிக் செய்து மீண்டும் அதனை பெற முயற்சிக்கலாம். உங்களது அக்கவுண்ட்டை கண்டறிந்து, அது ஹேக் செய்யப்பட்டிருப்பதை நீங்கள் அறிந்து கொண்டால் உங்களின் பாஸ்வேர்டை மாற்றி, தொடர்பு விவரங்களை அப்டேட் செய்ய வேண்டியது அவசியமாகும். 

இவ்வாறு செய்வதன் மூலம் ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும்.

Powered by Blogger.