போட்ட ட்வீட் மீண்டும் திருத்தும் வசதி Twitter Blue !!

ட்விட்டர் தளமானது அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது பணம் செலுத்தி பயன்படுத்தும் வகையில் ட்விட்டர் புளு (Twitter Blue) என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக, இந்த சேவை அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சமூக ஊடகமான ட்விட்டர், தனது வருவாயை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளது.

இந்த ட்விட்டர் புளு வசதியால், நாம் ட்வீட் செய்த பிறகும் கூட அந்த ட்வீட்டை திருத்தம் செய்திட முடியும், விளம்பரங்கள் இல்லாமல் செய்திகளை படிக்க முடியும் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் புதிய வசதியானது, பயனர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பயனர்களுக்கு எத்தகைய வகையில் உபயோகமாக இருக்கும் என்பதை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.


ட்விட்டர் புளு சர்வீஸ் என்றால் என்ன?

ட்விட்டர் தளமானது பணம் செலுத்திப் பயன்படுத்தும் வகையில் புதிய திட்டங்களை சில காலமாகவே அறிமுகப்படுத்திவருகிறது. சந்தை வருவாயை அதிகப்படுத்த பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. ஜனவரியில், Revue நிறுவனத்தை கைப்பற்றி, பயனர்கள் newsletters எழுவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியது. இதற்கு சிறிய அளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

மே மாதத்தில், Scroll நிறுவனத்தை கையகப்படுத்தி, வாடிக்கையாளர்கள் விளம்பரம் இல்லாமல் படிக்கும் வசதியை வழங்கியது. பின்னர், ஜூனில் ட்விட்டர் புளு குறித்த தகவலை வெளியிட்டது.

புதிய அம்சங்கள் என்னென்ன?

ட்விட்டர் புளு மூலம் பயனர்கள் வாஷிங்டன் போஸ்ட், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், ரோலிங் ஸ்டோன், தி அட்லாண்டிக் மற்றும் நூற்றுக்கணக்கானவற்றில் விளம்பரமில்லா அனுபவத்தைப் பெற முடியும். இதன் மூலம், நீங்கள் படிக்கும் பத்திரிக்கைகளுக்கு நேரடியாக சந்தா பணம் ட்விட்டர் நிறுவனத்தால் செலுத்தப்படுகிறது.

மேலும், ட்விட்டரில் பின்தொடரும் நபர்களால் அதிகளவில் பகிரப்பட்ட கட்டுரைகளைப் பற்றி தெரிவிக்கும் ஸ்க்ரோல் சேவையான Nuzzelஐ மிஸ் செய்வதவர்களுக்கு மீண்டும் அத்தகைய வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. ஸ்க்ரோலை வாங்கியபோது ட்விட்டர் நிறுவனம் Nuzzel சேவையை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.


ட்விட்டர் புளு சந்தாதாரர்கள் கடந்த 24 மணிநேரத்தில் தங்களது நெட்வோர்க்கில் அதிகம் பகிரப்பட்ட கட்டுரைகளை இப்போது எளிதாகப் பார்க்கலாம், முக்கியமானவற்றை உடனடியாகப் பார்க்கமுடியும்.

அதே போல், அவர்களால் 10 நிமிட வீடியோக்களை பதிவேற்றம் செய்திட முடியும். சாதாரண ட்விட்டர் பயனர்களால் இரண்டு நிமிட வீடியோ மட்டுமே பதிவேற்றம் செய்திட இயலும்.

கூடுதலாக, பிரத்யேக ஐகான்கள், வண்ணமயமான தீம்கள், புக்மார்க் ஃபோல்டர்கள் மூலம் பயனர்கள் தங்கள் ட்விட்டர் அனுபவத்தை மேம்படுத்தலாம். இதுமட்டுமின்றி கஸ்டம் நெவிகேஷன் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பயனர்கள் விரும்பிய பக்கத்தின் பதிவுகளை navigation bar-இல் விரைவாக அணுகும் வகையில் வடிவமைக்க இயலும்.

இறுதியாக, ட்விட்டர் வழங்கும் அனைத்து புதிய வசதிகளும், மற்றவர்கள் உபயோகிப்பதற்கு முன்பு ட்விட்டர் புளூ சந்தாதாரர்களுக்கு முதலில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Undo Tweets என்றால் என்ன?

பயனர்கள் நீண்ட நாள்களாக காத்திருந்த Undo Tweet வசதி தற்போது அறிமுகமாகியுள்ளது. இதன் மூதம், பயனர்கள் பதிவிட்ட ட்வீட்களை மீண்டும் திருத்தம் செய்திட இயலும். ஆனால், ட்வீட்டில் மாற்றங்களைச் செய்வதற்கு 60 வினாடிகள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதன் மூலம், நாம் பதிவிட்ட ட்வீட்டில் ஏதேனும் எழுத்துப்பிழைகள் இருப்பதைக் கவனித்தால், உடனடியாக மாற்ற உதவியாக இருக்கும்.

மேலும், சந்தாதாரர்கள் ரீடருக்கான அணுகலைப் பெறுவார்கள். இது நீண்ட நூல்களை எளிதாக படித்திட உதவியாக இருக்கும். தேவைக்கேற்ப எழுத்துகளைப் பெரிதாக்கிக் கொள்ளலாம். படிப்பதில் புதிய அனுபவத்தைப் பயனர்களுக்கு ட்விட்டர் வழங்குகிறது.

கட்டணம் எவ்வளவு?

ட்விட்டர் புளு வசதி, iOS, ஆண்ட்ராய்டு மற்றும் இணையம் என மூன்றுக்கும் வழங்கப்படுகிறது. அமெரிக்காவில் மாதம் 2.99 டாலர்(இந்திய மதிப்பில் ரூ.222) வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் ட்விட்டர் புளு அறிமுகப்படுத்துவதற்கான தேதி இதுவரை தெரியவில்லை.

 

 

 

 Tags:
#twitterblue #undo_tweets #subscription_service #nuzzul

 

No comments:

Powered by Blogger.