இ-மெயில் வழியாக பரவும் Diavol வைரஸ்.!

சமீபத்தில் மத்திய அரசு ஆன்லைனில் பரவும் புதிய வைரஸ் ஒன்று குறித்து எச்சரிக்கை கொடுத்துள்ளது. குறிப்பாக இந்த வைரஸ் இ-மெயில் வழியாக பரவும் என CERT-In (The Indian Computer Emergency Response Team) அமைப்பு கண்டறிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கணினி வழியாக பரவும் புதிய வைரஸ்-க்கு Diavol என்று பெயரிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதுவகை வைரஸ் முதலில்இ-மெயில் வழியாக விண்டோஸ்-க்குள் நுழைந்து பின்னர் கம்ப்யூட்டரை மொத்தமாக அணைத்து விடும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த Diavol வைரஸ் ஆனது ஓட்டுமொத்த விண்டோஸ் தளத்தையும் முடக்கி உங்களிடம் பணம் கேட்குமாம். அதேபோல் உங்களுக்கு தேவைப்படும் முக்கியமான கோப்புகளை மட்டும் முடக்கி வைத்துவிட்டு அதன் பின்னர் மிரட்டி பணம் கேட்கும் என்று கூறப்படுகிறது. தற்போது இதுகுறித்து எச்சரிக்கையை தான் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்த புதியவகை வைரஸ் பாதித்துவிட்டால் தேவைப்படும் பணத்தை பிட்காயின் வழியாக மட்டுமே பயனாளர்கள் கொடுக்க வேண்டும் என்று மிரட்டுவதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை பயனாளர் பணம் தராவிட்டால் கணனியில் உள்ள முக்கிய கோப்புகளை டெலிட் செய்துவிடுகிறதாம். சில சமயம் ஒட்டுமொத்த கணினியும் பயன் இல்லாமல் போய்விடுகிறது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இ-மெயில் வழியாக இந்த வைரஸ் ஒருவருக்கு அனுப்பப்படுகிறது. பின்பு இதனுடன் OneDrive-க்கான லிங்க் ஒன்று கொடுக்கப்படுகிறது. இதை பயனர்கள் டவுன்லோடு செய்து பார்க்கும் வகையில் அந்த மெயில் இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த லிங் ஃபைல் மூலமாக வைரஸ் கணினிக்குள் புகுந்துவிடுகிறதாம்.
 

இதுபோன்ற மோசமான வைரஸ் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க உங்களது சாஃப்ட்வேர்களை அடிக்கடி அப்டேட் செய்ய வேண்டும். பின்பு உங்களது ஒஎஸ் (os) அடிக்கடி அப்டேட் செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியம். அதேபோல் உங்களுக்கு வரும் அனைத்து இ-மெயில்களையும் டிடெக்ட் மற்றும் ஃபில்டர் செய்வது மிகவும் நல்லது. இதன் மூலம் எதாவது threat காண்பிக்கிறதா என்பதை கவனிக்க முடியும். மேலும் உங்கள் கணினியில் எந்தவொரு டவுன்லோடு அல்லது இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றாலும் users permissions வேண்டும் என்பது போல் செட்டிங் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

அதேபோல் கூகுள் நிறுவனம் சமீபத்தில் ஜோக்கர் மால்வேரால் பாதிக்கப்பட்ட மொபைல் ஆப்ஸ்கள் நீக்கியுள்ளது. குறிப்பாகஇந்த ஜோக்கர் மால்வேர் தொற்றைத் தடுக்க உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோன்களில் இருந்து இந்த 7 ஆப்ஸ்களை உடனடியாக டெலீட் செய்யும்படி கூகிள் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. ஜோக்கர் மால்வேர் மூலம் பாதிக்கப்பட்ட ஆப்ஸ்களின் பட்டியல் இதோ.


இந்த 7 ஆப்ஸை உடனே டெலீட் செய்யுங்கள் மக்களே 
1.கலர் மெசேஜ் (Color Message) 
2.சேஃப்டி ஆப்லாக் (Safety AppLock) 
3.கன்வீனியன்ட் ஸ்கேனர் 2 (Convenient Scanner 2) 
4.புஷ் மெசேஜ் - டெக்ஸ்டிங் & எஸ்எம்எஸ் (Push Message-Texting&SMS) 
5.இமோஜி வால்பேப்பர் (Emoji Wallpaper) 
6.செப்பரேட் டாக் ஸ்கேனர் (Separate Doc Scanner) 
7.பிங்கர்டிப் கேம் பாக்ஸ் (Fingertip GameBox)

இந்த 7 ஆப்ஸ்களும் மோசமான ஜோக்கர் மால்வேரால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதனால், இந்த ஆப்ஸ்களை நீங்கள் பயன்படுத்தாமல் இருப்பது பாதுகாப்பானது. இந்த 7 ஆப்ஸ்களில் ஏதேனும் ஒரு ஆப்ஸ் கூட உங்கள் போனில் இருந்தால் அவற்றை உடனடியாக டெலீட் செய்யுங்கள். இந்த ஆபத்தான ஆப்ஸ்களை உங்களுக்குத் தெரிந்தவர்கள் கூட பயன்படுத்த வாய்ப்பிருப்பதனால் இந்த தகவலை அவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். எப்போதும் உங்கள் போனில் ஆன்டிவைரஸ் மற்றும் ஆன்டிமால்வேர் சாப்ட்வேர்களை பயன்படுத்துவது சிறப்பானது. 
 
ஜோக்கர் தீம்பொருள் அதன் குறியீட்டில் சிறிய மாற்றங்களை மேற்கொண்டு Google Play ஸ்டோர் பாதுகாப்பு அம்சத்தை நேர்த்தியாகக் கடந்துவிடுகிறது. Play store இன் பாதுகாப்பு மற்றும் சரிபார்ப்பு சோதனைகளை இது எளிமையாகத் தொடர்ந்து தவிர்த்து வருகிறது. இந்த மால்வேர் மிகவும் ஆபத்தானது மற்றும் அடிக்கடி மீண்டும் தோன்றக் கூடியது. ஆகையால், பயனர்கள் app பதிவிறக்கம் செய்யும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும்.


No comments:

Powered by Blogger.