Tuesday, June 10 2025

டிஜிட்டல் மார்கெட்டிங்

டிஜிட்டல் மார்க்கெட்டிங் ( Digital Marketing ) என்றால் என்ன? அது எப்படி உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த உதவுகிறது என்பதை இந்த கட்டுரை விவரிக்கிறது.

=============================================================



இப்போது டிஜிட்டல் மார்க்கெட்டிங் ( Digital Marketing ) யுகம். சந்தைப்படுத்தும் யுக்திகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே வந்திருக்கிறன்றன. அதுவும் இந்த டிஜிட்டல் யுகத்தில், சோஷியல் மீடியா, SEO, மற்றும் பிற இன்டர்நெட் மார்க்கெட்டிங் வியூகங்கள் தவிர்க்க முடியாதவை. உதாரணத்திற்கு உங்களுடைய ப்ரொடக்ட் ‘பருப்பை’ விற்பதாக இருந்தாலும் கூட.

டிஜிட்டல் மார்கெட்டிங் ( Digital Marketing ) :

எல்லாருக்கும் பொதுவான ஒரு விளம்பரம் ( advertisement ) மூலம் மார்க்கெட்டிங் செய்வது ஹைதர் கால யுக்தி. டார்கெட்டட் மார்க்கெட்டிங் எனப்படுகிற, சரியான கஸ்டமரிடம் சரியான நேரத்தில் (context) கொண்டு செல்வதுதான் கூடுதல் பயனுள்ள முறையாக இருக்கிறது. இது, செய்தித்தாள், FMCG எனப்படும் நுகர் பொருட்கள், வலைப்பூ ட்ராஃபிக், பேஷன் பொருட்கள், அரசியல் கட்சி பிராண்டிங், புத்தகம், சேவை (Services), சுற்றுலா, ஹோட்டல் என எல்லா சந்தைப் பொருட்களுக்கும் பொருந்தும்.

உதாரணமாக, உங்கள் ஆர்கானிக் பருப்பை சந்தைப் படுத்த விரும்புகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். ஒருவர் ஆரோக்கிமான உணவு முறைகள் பற்றி சோஷியல் மீடியாவிலோ, ஈமெயிலிலோ ஒரு நண்பரிடம் பேசுகிறார்.

அவருடைய வாங்கும் நடவடிக்கை (buying behaviour) முதலான தகவல்களை சேகரிக்க வேண்டும். (இவ்வாறு சேகரிக்க பல apps மற்றும் tools உள்ளன). இவ்வாறு திரட்டிய தகவல்கள் மூலம், சரியான வாடிக்கையாளரை சரியான சமயத்தில் அணுகி உங்கள் பொருளை சந்தைப் படுத்தவேண்டும். இது டார்கெட்டட் மார்க்கெட்டிங்கின் (Contextual Targeting Strategy) ஓர் உதாரணம். பொது நுகர்வோர், ஒரு போது செய்தியைப்பற்றியோ, கட்டுரை அல்லது ஒரு பிராண்ட் பற்றியோ சமூக வலைத்தளங்களில் விவாதிக்கிறார்கள்; அல்லது அவர்களுடைய தனி நிகழ்வுகளை புகைப்படங்களுடன் பதிவிடுகிறார்கள்.

இது மார்க்கெட்டர்களுக்கு அருமையான வாய்ப்பு; அந்த உரையாடல்களில் கலந்து கொள்வதன் மூலம் உங்கள் பிராண்ட்க்கான அவர்நெஸ் (Brand Awareness) உருவாக்க முடியும்; அல்லது புதிய உரையாடலை உருவாக்குவதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களையே மார்க்கெட்டிங்குக்கு பயன்படுத்தவும் முடியும். இந்த உரையாடல்களில் கூகிள் அஸ்ஸிஸ்டண்ட், அமேசான் அலெக்சா இவைகளுடன் நிகழ்த்தும் Voice உரையாடல்களும் அடக்கம். இந்த voice உரையாடல்களிலிருந்து தகவல் திரட்டுவது சவாலான விஷயம்தான்.

“என்ன? நான் என் நண்பருடன் தனிப்பட்ட முறையில்தானே Organic பற்றி சாட் செய்து கொண்டிருந்தேன்? அதெப்படி மார்கெட்டருக்கு தெரியும்?” என்று கேட்பீர்களேயானால், இது “என்ன? இந்திரா காந்தி இறந்து விட்டாரா?” என்று கேட்பதற்கு சமம்.

இணையத்தில் நீங்கள் பதிவிடுகிற அல்லது விவாதிக்கிற ஒவ்வொரு தகவலும், உங்கள் சம்மதத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பெற்று பகிரப்படுகிறது என்பது மிகப் பழைய செய்தி.

Paid Campaign:

Google AdWords, Facebook paid ads, display marketing, Affliate Marketing என்று டிஜிட்டல் மார்கெட்டிங்கில் பல வழிகள் உண்டு. உதாரணமாக ஃபேஸ்புக் மார்கெட்டிங் நுட்பங்களில் சிலவற்றை சுருக்கமாக பார்ப்போம்.

ஃபேஸ்புக் விளம்பரங்கள்: 

டெமோகிராஃபிக்கிற்கு (Demogrpahy) தகுந்தவாறு விளம்பரங்கள் அமைத்து நமக்கான பட்ஜெட்டையம் தீர்மானித்து, விளம்பரங்களின் செயல்பாட்டையும் அளவிட முடியும் என்பது இவற்றின் சிறப்பு. ஃபேஸ்புக் போட்டிகள், போஸ்ட் ப்ரோமோஷன், Sponsored Stories, ஓபன் க்ராஃப் என ஃபேஸ்புக் மார்கெட்டிங் யுக்திகள் பல உண்டு.
Paid மார்க்கெட்டிங் நுட்பங்கள் ஒருபுறமிருக்க, ஆர்கானிக் search (unpaid) மூலமாகவே தமது தளங்களுக்கான டிராஃபிக்கை அதிகப்படுத்த பயன்படுத்தும் தொழில்நுட்பம்தான் SEO எனப்படும் Search Engine Optimization. SEO பற்றிய தகவல்களும், புத்தகங்களும், படிப்புகளும் ஏராளமாக இருக்கின்றன. இதன் அடுத்த கட்டம் Mobile SEO.


Powered by Blogger.