Mobile SEO
மொபைல்களின் தாக்கம்
Mobile SEO பற்றி விவாதிக்கும் முன்னர், சில புள்ளிவிவரங்கள்:
- 2018-ல் உலகளாவிய மொத்த இன்டர்நெட் ட்ராஃபிக்கில், 51.2 சதவிகிதம் மொபைல் ட்ராஃபிக்.
- உலகளாவிய மொபைல் இன்டர்நெட் ட்ராஃபிக்கின் வளர்ச்சி 2016-லிருந்து 2021 க்குள் ஏழு மடங்காக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
- ஜனவரி 2018-ல் உலகளாவிய மொபைல் உபயோகிப்பவர் எண்ணிக்கை 3.7 பில்லியனை எட்டியது.
- இதிலிருந்து மொபைல் இன்டர்நெட் மார்க்கெட்டிங் வியூகங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது தெரிகிறது.
முதலில் மூன்று வகையான மொபைல் வலைத்தளங்களைப் பற்றி பார்ப்போம்:
1) இணையதள வலைத்தளத்திற்கும், மொபைல் வலைத்தளத்திற்கும்
தனித்தனி URLs
2) டைனமிக் செர்விங்
3) ரெஸ்பான்சிவ் டிசைன்
முதல் வகையில், இரு URL-களும், ஸ்க்ரீன் அளவுக்கு தகுந்தபடி,
வலைத்தளத்தை காண்பிக்கும் வண்ணம், தனித்தனி HTML code ப்ரோக்ராம்
செய்யப்பட்டிருக்கும்.
ஒரே URL, சாதனத்தின் (டெஸ்க்டாப், மொபைல் அல்லது டாப்லெட்) ஸ்க்ரீன்
அளவுக்கு தகுந்தபடி, சர்வர் தனித்தனி HTML/CSS டிஸ்பிளே தருவதுதான் டைனமிக்
செர்விங்.
ரெஸ்பான்சிவ் டிசைனில், ஒரே URL -ல் ஒரே HTML code உள்ளடக்கம்.
இருந்தாலும், source code-ல் meta name=”viewport” tag சேர்ப்பதன் மூலம்
இன்டர்நெட் பிரௌஸர் தாமாகவே அட்ஜஸ்ட் செய்து கொள்ளும். இதன் மூலம் பயனரின்
ஸ்க்ரீன் அளவுக்கு தகுந்தபடி display செட்டிங் மாற்றிக்கொள்ளும்.
இந்த மூன்றிலும் ரெஸ்பான்சிவ் டிசைன் முறையில் பயன்கள் அதிகம்.
Mobile SEO:
முதலில் SEO என்றல் என்ன என்பதை எளிய மொழியில் சொல்வதென்றால், ஓர்
இணையதளத்தை, தேடல் எந்திரங்கள் ஆர்கானிக் முறையில் (unpaid) எளிதாக
கண்டறிந்து வழங்க வேண்டி, அந்த தளத்தை தயார் செய்யும் வழிமுறை தான் SEO
எனப்படும் Search Engine Optimization.
மொபைலின் பக்கங்களையும் இவ்வாறு SEO செய்து, தயார் செய்ய வேண்டிய
அவசியத்தை மொபைல் இணைய பயன்பாட்டின் பிரம்மாண்ட வளர்ச்சி உணர்த்துகிறது.
உங்கள் மொபைல் பக்கத்தில் CSS, JavaScripts பயன்படுத்துவதாக இருந்தால், inline CSS, JavaScripts பயன்படுத்த வேண்டும். மற்ற உட்பொருட்களை மறைக்காத வண்ணம், பக்கத்தின் கீழ் பகுதியில் பயன்படுத்த முடிந்தால் நல்லது.
மொபைல் பக்கத்தில் பல லின்க்ஸ் அல்லது URL-கள் இருக்குமென்றால், அவை ரீ-டைரக்ட் செய்யும்போது சரியான மொபைல் தளத்திற்கு இட்டுச் செல்கிறதா என உறுதி செய்துகொள்ளவேண்டும்.
ஒரு வலை பக்கத்தில் படங்கள் (Images) இடம் பெறுவதை தவிர்க்க முடியாது. ஆனால் படங்கள் மொபைல் பக்கங்களில் தோன்றுவதற்கு தாமதமாக வாய்ப்பு இருப்பதை நினைவில் கொள்ளவேண்டும். இதனால் கூடியவரை கனமான இமேஜ் ஃபைல்களை தவிர்க்க முயலவேண்டும்.
Pop-up மற்றும் Plug-in இவை மொபைல் பக்கங்களில் இடம் பெறுவதை தவிர்க்க வேண்டும்.
அதே போல் மொபைல் பக்கங்களில் வீடியோக்களை இடம் பெறச் செய்யவேண்டியிருந்தால், HTML 5 பயன்படுத்துவது நல்லது.
ஒவ்வொரு வலை பக்கமும் எதை பற்றியது என்பதை அறிந்து, அதன் பார்வையாளர்கள் எத்தகையவர்கள் என கணித்து அதற்கு தகுந்தாற்போல் விளம்பரம் கொடுப்பது contextual டார்கெட்டிங்கிற்கு ஓர் உதாரணம்.
போட்டி நிறைந்த இந்த காலகட்டத்தில், நம்முடைய போட்டியாளர்களை விட சிறந்த முறையில் நம் பொருட்களை சந்தை படுத்தவேண்டுமெனில், புதிய தொழில்நுட்பங்களை கையாண்டு, புதுமையான வியுகங்களை அமைப்பது மிகவும் அவசியமாக இருக்கிறது.
மொபைல் SEO பற்றி சில குறிப்புகள்:
மொபைல் பக்கங்கள் தோன்றும் வேகம்: மொபைல் நெட்ஒர்க் அத்தனை வலுவானதல்ல; வேகம் குறைவு. இதனையும் கருத்தில் கொண்டு, இருந்தாலும் மொபைல் பக்கங்கள் விரைவாக தோன்ற வேண்டும் என்ற அளவுக்கு டிசைன் செய்ய வேண்டும்.உங்கள் மொபைல் பக்கத்தில் CSS, JavaScripts பயன்படுத்துவதாக இருந்தால், inline CSS, JavaScripts பயன்படுத்த வேண்டும். மற்ற உட்பொருட்களை மறைக்காத வண்ணம், பக்கத்தின் கீழ் பகுதியில் பயன்படுத்த முடிந்தால் நல்லது.
மொபைல் பக்கத்தில் பல லின்க்ஸ் அல்லது URL-கள் இருக்குமென்றால், அவை ரீ-டைரக்ட் செய்யும்போது சரியான மொபைல் தளத்திற்கு இட்டுச் செல்கிறதா என உறுதி செய்துகொள்ளவேண்டும்.
ஒரு வலை பக்கத்தில் படங்கள் (Images) இடம் பெறுவதை தவிர்க்க முடியாது. ஆனால் படங்கள் மொபைல் பக்கங்களில் தோன்றுவதற்கு தாமதமாக வாய்ப்பு இருப்பதை நினைவில் கொள்ளவேண்டும். இதனால் கூடியவரை கனமான இமேஜ் ஃபைல்களை தவிர்க்க முயலவேண்டும்.
Pop-up மற்றும் Plug-in இவை மொபைல் பக்கங்களில் இடம் பெறுவதை தவிர்க்க வேண்டும்.
அதே போல் மொபைல் பக்கங்களில் வீடியோக்களை இடம் பெறச் செய்யவேண்டியிருந்தால், HTML 5 பயன்படுத்துவது நல்லது.
Contextual டார்கெட்டிங் வியூகங்கள்:
பொதுவான விளம்பரங்களை வெளியிடாமல் Context அறிந்து, சரியான விளம்பரங்களை அளிப்பதுதான் இப்போதைய ட்ரெண்ட்.ஒவ்வொரு வலை பக்கமும் எதை பற்றியது என்பதை அறிந்து, அதன் பார்வையாளர்கள் எத்தகையவர்கள் என கணித்து அதற்கு தகுந்தாற்போல் விளம்பரம் கொடுப்பது contextual டார்கெட்டிங்கிற்கு ஓர் உதாரணம்.