உங்களை கண்காணிக்கும் கூகுளிடமிருந்து தப்பிப்பது எப்படி? வழிமுறைகள் இதோ.!


பயன்பாட்டாளர்கள் தங்களது லொகேஷன் தகவல்களை சேமிக்காமல் இருக்க டர்னிங் ஆப் லோகேன் ஹிஸ்டரி என்ற ஆப்ஷனை கொடுத்திருக்கின்றது கூகுள். இது உங்களை தகவல்களை பெறாமல் இருப்பதில்லை என்று சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 
அதாவது நீங்கள் வெளிப்படையாக வேண்டாம் என்று குறிப்பிடும் கூகுள் ஒரு சில பொழுதுகளில் உங்களை டிராக் செய்கின்றது என ஆய்வுகள் தெரிவிக்கின்றது. கூகுள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை உங்களின் லோக்கேஷன் (இருப்பிடத்தை) தெரிந்து கொள்கின்றது. நீங்கள் சந்தேகப்படும் படி உங்களின் லோககேஷனை யாராவது டிராக் செய்தால், அதனை எப்படி தடுப்பது என்று பார்க்கலாம். லோக்கேஷன் ஹிஸ்டரியை மட்டும் ஆப் செய்தால் போதாது வெப் அன்டு ஏக்டிவிட்டி (Web & App Activity ) செட்டிங்கையும் ஆப் செய்ய வேண்டும்.



தடுக்கும் வழிமுறைகள்:

* மை அக்கவுண்ட் கூகுள்.காம் முதலில் ஏதேனும் பிரவுசரை ஓபன் செய்து கொள்ளவும். பின் https://myaccount.google.com என்ற இந்த லிங்க்கை கிளிக் செய்து கூகுள் அக்கவுண்ட் பக்கத்துக்குச் செல்லவும். இது உங்கள் கூகுள் கணக்கை பற்றி அனைத்து தகவல்களையும் கொண்டிருக்கும். அதில் பெரச்னல் இன்போ அன்டு பிரைவசி (Personal info& Privacy) என்றதை கிளிக் செய்யவும். இது தங்களை பற்றி தகவல்களையும் பிரைவசி ஆப்ஷன்களை உள்ளடக்கியிருக்கும்.



கோ டு மை ஆக்டிவிட்டி:
  
இந்த பக்கத்தில் 'Go to My Activity' என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்தால், கூகுள் எந்த தகவல்களை சேமிக்கின்றது என்று பார்க்ககவும் கட்டுப்படுத்தவும் முடியும்.
 
வேப் அன்டு ஆப் ஆக்டிவிட்டி: 
இந்த activity control பக்கத்தில் 'Web & App Activity' என்ற பெயரில் நீல நிற பட்டன் ஒன்றை பார்க்கலாம். இதை ஆப் செய்ய வேண்டும்.



செல்போனிலும் செய்யலாம்: 
இதை பிரவுசர் அல்லாமல் மொபைல் போனில் உள்ள் செட்டிங்கு பகுதியிலும் செய்ய முடியும். Settings > Google > Google Account என சென்றவுடன் உங்கள் அக்கவுண்ட் பக்கம் வந்து விடும் அதில், ‘Data & personalization' என்று பிரிவுக்கு சென்று மேலே கூறியதைப்போல ' Web & App Activity' கிளிக் செய்தால் போதும், மேலும் இந்த செட்டிங்ஸில் உள்ள செட்டிங்ஸ் பலவேற்றறை உங்களுக்கு ஏற்றது போலவும் மாற்றி அமைத்து கொள்ளலாம். இதையும் தாண்டி வேறு ஏதாவது வழியை கூகுள் நிறுவனம் உங்களின் கண்காணிக்கலாம்.

No comments:

Powered by Blogger.