Friday, July 11 2025

"ராங் கால்ஸ்" எண்ணின் உரிமையாளரைக் மூன்று வழிகளில் கண்டுபிடிப்பது எப்படி?

 
 நமக்கு சில நேரங்களில் நிறைய ராங் கால்ஸ் வந்திருக்கும். அதிலும் சில நேரங்களில் ராங் கால் செய்த நபர் ராங்கா பேசி நம்மை கடுப்பேத்தி பார்த்திருப்பார். அவர்களைப் போன்ற ராங் நபர்களின் விவரங்களை வெறும் போன் எண்களை வைத்துக் கண்டுகொள்ள முடியாது. இந்தத் தைரியத்திலேயே இந்த ஜாம்பவான்கள் ராங்காக நடந்துகொள்கிறார்கள். அவர்களையும் அவர்களது விவரங்களையும் இனி எளிதில் கண்டுகொள்ளலாம். அவர்களைப் பற்றிய விவரங்களை எப்படி அறியலாம் என்பதற்கான சிம்பிள் டிப்ஸ் தான் இது.


உங்களுடைய முகப்புத்தகத்தை இப்படியும் பயன்படுத்தலாம் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்.


 

செயல் முறை 1:

- முதலில் உங்கள் போன் இல் கூகுள் கிறோம் ஓபன் செய்யுங்கள். 
- உங்களுடைய கூகுள் கிறோம் இல் முகப்புத்தகத்திற்கான வலைத்தளத்தை டைப் செய்யுங்கள். 
- உங்களுடைய முகப்புத்தக அக்கௌன்ட் ஓபன் ஆகி இருந்தால் அதை லாகவுட் செய்துகொள்ளுங்கள். 
- இப்பொழுது உங்களுக்கு வந்த ராங் நம்பர் எண்ணைக் கோப்பி செய்துகொள்ளுங்கள். 
- முகப்புத்தக வலைத்தளத்தில் "பர்காட் பாஸ்வோர்ட்(forgot password)" கிளிக் செய்யுங்கள். -
 இப்பொழுது காப்பி செய்த ராங் நம்பர் எண்ணை அதில் பேஸ்ட் செய்து கிளிக் செய்யுங்கள்.


அக்கௌன்ட் விவரம் அந்த எண்ணில் பதியப்பட்டிருக்கும் அக்கௌன்ட் விவரம் பெயர் மற்றும்புகைப்படத்துடன் உங்களுக்குக் கிடைக்கும். - இப்பொழுது முகப்புத்தக செயலில் உங்களுடைய அக்கௌன்ட் ஓபன் செய்யுங்கள். - "சர்ச்(search)" டேப் சென்று அந்த நபரின் பெயரை டைப் செய்யுங்கள். - அவருடைய அக்கௌன்ட் இல் "அபௌட்(about)" கிளிக் செய்யுங்கள். இந்த முறைப்படி அவரின் பெயர், புகைப்படம் மற்றும் இருப்பிடம், கல்லூரி விவரங்கள் போன்ற அணைத்து விபரங்களையும் உங்களால் தெரிந்துகொள்ள முடியும்.


உங்கள் வாட்ஸ் ஆப் பயன்படுத்தி ராங் எண்ணின் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். 
 
 

செயல் முறை 2:

- உங்களுக்கு வந்த ராங் கால்எண்ணைக் காப்பி செய்துகொள்ளுங்கள். 
- உங்கள் வாட்ஸ் ஆப் செயலி ஓபன் செய்து பின்வரும் செயல்முறைகளை பின்பற்றுங்கள். 
- வாட்ஸ் ஆப் காண்டாக்ட் ஓபன் செய்து "ஆட் காண்டாக்ட்(add contact)" கிளிக் செய்யுங்கள். 
- இப்பொழுது உங்களுக்கு வந்த ராங் எண்ணை அதில் பேஸ்ட் செய்து 
- ஏதேனும் பெயரிட்டு புதிய காண்டாக்ட் ஐ சேவ் செய்யுங்கள். 
- இப்பொழுது வாட்ஸ் ஆப் செயலியை "ரெப்பிரேஷ்(Refresh)" செய்து கொள்ளுங்கள். 
- சேவ் செய்யப்பட்ட ராங் எண்ணின் போட்டோ மற்றும் பெயர் விவரம் "ப்ரொபைல்(Profile)" இல் வரும்.


பெயர் அறிய முடியும் இந்த முறைப்படி முழு விபரங்களை அறிய முடியாது. ஆனால் அவர் யார் என்பதைப் போட்டோ மற்றும் பெயர் விபரங்களை வைத்து அறிய முடியும். சில நேரங்களில் போட்டோ நமக்குத் தெரியாது, இருப்பினும் அந்த நம்பர் சேவ் செய்யப்பட்ட பெயர் நமக்குத் தெரியும்.

 
இந்தச் செயல்முறை நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். "ட்ரு காலர்(True caller)" பயன்படுத்தி எளிய வழியில் அவர்களின் விபரங்களை அறிந்துகொள்ளலாம். 
 
 

செயல் முறை 3:

- ட்ரு காலர் செயலி ஐ முதலில் பிளே ஸ்டோர் இல் டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். 
- ட்ரு காலர் செயலி இல் மேற் கார்னர் இல் மூன்று புள்ளிகள் இருக்கும், அதை கிளிக் செய்யுங்கள். - "செட்டிங்ஸ்(settings)" கிளிக் செய்யுங்கள். 
- செட்டிங்ஸ் இல் காலர் ஐடி செல்லுங்கள். 
- "ஷோ அன்நொன் காலர்(Show Unknown Caller)" கிளிக் செய்யுங்கள். 
- இப்பொழுது அந்த ராங் நம்பரைக் கால் டைப் செய்யுங்கள். 
- அவருடைய போட்டோ உடன் கூடிய விவரங்கள் உங்களுக்குத் தெரியும்.

ட்ரு காலர் செயலி 

இதன் மூலம் ட்ரு காலர் செயலி, உங்களுக்குத் தெரியாத எண்களின் விவரங்களைக் காண்பிக்க அனுமதி வழங்குகிறது. சில நேரங்களில் அவர்களுடைய மெயில் ஐடி முதற்கொண்டு உங்களுக்குத் தெரிவிக்கிறது இந்தச் செயலி.
 
சமுக வலைத்தளம் இந்த மெயில் ஐடி கொண்டு முகப்புத்தகம் மற்றும் சமுக வலைத்தளங்களில் அவர்களுடைய விவரங்களை நாம் அறிந்துகொள்ளலாம்.



Powered by Blogger.