ஐபோனுக்கு 'Type C' போர்ட்!

டைப் சி சார்ஜிங் போர்ட்டோடு மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 'ஐபோன் X' ஒன்று சமீபத்தில் இணையதளத்தில் ஏலத்திற்கு வந்தது. டைப் சி போர்ட்டோடு ஐபோனா எனக் குழம்ப வேண்டாம். ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ரோபோடிக்ஸ் துறையில் பயிலும் கென் பில்லோனெல் (Ken Pillonel) என்கிற மாணவர் தான் தனிப்பட்ட முறையில் இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.

டைப் சி சார்ஜிங் போர்ட்டுக்கு ஏற்றவாறு ஐபோனின் PCB போர்டிலும் மாற்றங்களைச் செய்து ஐபோனை டைப் சி போர்ட்டுடன் மறுவடிவமைப்பு செய்திருக்கிறார். இவர் சொந்த முயற்சியால் மறுவடிவமைப்பு செய்த ஐபோன், வழக்கமான ஐபோனைப் போலவே சார்ஜிங் மற்றும் தகவல் பரிமாற்றம் என எல்லாவற்றையும் செய்ய முடிகிறது, ஆனால் டைப் சி பேபிளுடன்.

ஹார்டுவேர் தொழில்நுட்பத்தில் கென்னுக்கு கொஞ்சம் அனுவபவம் இருந்ததனால் இதனை அவரால் சாத்தியப்படுத்த முடிந்திருக்கிறது. இந்த ஐபோனை இணையத்தில் ஏலத்திலும் விட்டிருக்கிறார். டைப் சி சார்ஜிங் போர்ட்டோடு ஐபோன் இருக்கிறது என்ற தகவல் தீயாய்ப் பரவ 86,001 அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் தோராயமாக 64 லட்சம் ரூபாய்) அந்த ஐபோனை ஏலத்தில் எடுத்திருக்கிறார் ஒருவர். ஐபோனை டைப் சி சார்ஜிங் போர்ட்டோடு மறுவடிவமைப்பு செய்தது குறித்த காணொளி ஒன்றையும் தனது யூடியூப் சேனலில் பதிவிட்டிருக்கிறார் அவர்.

ஐரோப்பாவில் அனைத்து மொபைல் போன்களுக்கு டைப் சி சார்ஜரை மட்டுமே கொடுக்க என ஐரோப்பிய யூனியன் உத்தரவு பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.