இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிக்க புதிய வழி; இன்ஸ்டா அப்டேட்ஸ்!
படைப்பாளிகள் தங்களது பாலோவர்ஸ் மூலம் பணம் ஈட்டுவதற்காக பேட்ஜஸ் (Badges) என்ற வசதியை அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தவிருக்கிறது இன்ஸ்டாகிராம்.
2020-லேயே இந்த வசதியை அறிமுகப்படுத்தியது இன்ஸ்டா, ஆனால் குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும். தற்போது இந்த வசதியை அனைத்து பயனர்களாலும் பயன்படுத்த முடியும். 18 வயதுக்கு மேற்பட்ட, 10,000 பாலோர்கள் கொண்டவர்களால் இந்த வசதியைப் பயன்படுத்தி பணம் ஈட்டமுடியும்.
படைப்பாளிகள் வீடியோ லைவ் செய்யும்போது அவரது பாலோவர்களால் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி பேட்ஜஸை வாங்க முடியும். இந்தத் தொகை தான் அந்தப் படைப்பாளிகளுக்குச் சென்று சேரும்.
பேட்ஜஸ் மூலம் கிடைக்கும் தொகையில் இன்ஸ்டாகிராமின் பங்கு எதுவும் இப்போது இல்லை. ஆனால், செயலியின் மூலம் செய்யப்படும் பணப்பரிவர்த்தனைகளில் 30 சதவிகிதம் கூகுள் மற்றும் ஆப்பிளுக்குக் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும். ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ் உள்ளிட்ட 11 நாடுகளில் குறிப்பிட்ட பயனர்கள் இந்த வசதியினைத் தற்போது பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்தியப் பயனர்களுக்கு விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.