லைவ்ஸ்ட்ரீம் ஷாப்பிங் - ட்ரெண்டிற்குள் நுழையும் ட்விட்டர்!
முதல் லைவ்ஸ்ட்ரீம் ஷோ ஜேசன் டெருலோவால் "30 நிமிட வெரைட்டி ஷோவாக " நடத்தப்படும் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.
மைக்ரோ-பிளாக்கிங் தளமான Twitter விரைவில் ஷாப்பிங் மற்றும்
லைவ்ஸ்ட்ரீமை இணைத்து ஹோஸ்ட் செய்யும் சமூக ஊடக தளமாக மாறப்போகிறது.
மேலும், நிறுவனம் தனது முதல் ஷாப்பிங் லைவ்ஸ்ட்ரீமை நவம்பர் 28ம் தேதி
அன்று 7PM ET (5:30AM IST) மணிக்கு நடத்த இருப்பதாவும் தெரிவித்துள்ளது.
இந்த ஷாப்பிங் அம்சத்தை வால்மார்ட்டுடன் இணைந்து Twitter நடத்துவதாக
தெரிவித்துள்ளது. மேலும் இந்த சேல் "சைபர் டீல்ஸ் சண்டே" என்ற பெயரில்
தேங்க்ஸ் கிவ்விங் வாரத்தின் இறுதியில் நடைபெறும். இது பல நாடுகளில்
பாரம்பரியமாக நடத்தப்படும் சேல் ஆகும். இந்த நாளின் போது எல்லா இடங்களிலும்
பெரிய சலுகைகள் வழங்கப்படும்.
இந்த முதல் லைவ்ஸ்ட்ரீம் ஷோ ஜேசன் டெருலோவால் "30 நிமிட வெரைட்டி ஷோவாக " நடத்தப்படும் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது. அதில் "எலக்ட்ரானிக்ஸ், வீட்டுப் பொருட்கள், ஆடைகள், பருவகால அலங்காரங்கள், சிறப்பு விருந்தினர்களை ஆச்சரியப்படுத்துதல் மற்றும் பல" இடம்பெறும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஷாப்பிங் மற்றும் லைவ்ஸ்ட்ரீம் டிரெண்டிங்கில் ட்விட்டர் முதல்முறையாக நுழைந்திருக்கிறது. இதற்கு முன், மெட்டா ஃபேஸ்புக்கிற்கான "லைவ் ஷாப்பிங் ஃபார் கிரியேட்டர்ஸ்" அம்சம் தொடர்பாக சோதனை நடத்தி வருவதாக அறிவித்தது.
அதேபோல Pinterest ஆனது "Pinterest TV" என்ற நேரடி ஷாப்பிங் features ஐ அறிமுகப்படுத்தியது. மேலும் YouTube அதன் நேரடி-ஷாப்பிங் அம்சத்தை YouTube ஹாலிடே ஸ்ட்ரீம் மற்றும் ஷாப் எனப்படும் ஒரு வார கால ஷாப்பிங் நிகழ்வுடன் விரிவுபடுத்தியது. பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது லைவ்ஸ்ட்ரீம் ஷாப்பிங் முன்னெடுத்து வருவது புதிய ட்ரெண்டாகவே மாறியுள்ளது. முக்கியமாக இந்த லைவ் ஸ்ட்ரீம் ஷாப்பிங் சீனாவில் ஒரு குறிப்பிட்ட அளவு வரவேற்பை பெற்றுள்ளது.
அங்குள்ள Gen Z வாடிக்கையாளர்கள் பாரம்பரிய E-Commerce சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து சமூக ஊடகங்கள் வழியாக கொள்முதல் செய்வதை நோக்கி அதிகளவில் மாறி வருகின்றனர். நிறுவனம் பகிர்ந்துள்ள படங்களின்படி ட்விட்டரின் லைவ் ஷாப்பிங் இன்டெர்பேசானது, வீடியோ லைவ்ஸ்ட்ரீம், ஆன்லைன் கேட்லாக் மற்றும் ட்வீட்களின் நியூஸ் பீட் போன்றவற்றை தனித்தனியாக பிரித்துக் காண்பிக்கிறது. நீங்கள் விற்பனையாளரின் இணையதளத்திற்கான லிங்கை பின்தொடர்ந்தால், ஸ்ட்ரீமானது பிக்சர்-இன்-பிக்சர் பயன்முறையில் தொடர்ந்து இயங்கும்.
மேலும் இந்த ஷாப்பிங் எலிமெண்ட்டுகள் ஆரம்பத்தில் iOS மற்றும்
டெஸ்க்டாப்பில் மட்டுமே வரும் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது. மறுபுறம்,
ஆண்ட்ராய்டு யூசர்கள் ஸ்ட்ரீமை நேரலையில் பார்க்க முடியும். ஆனால் ஷாப்பிங்
அம்சங்களுடன் ஈடுபட முடியாது. நவம்பரில் வெளியிடப்படும்
ட்விட்டர்-வால்மார்ட் ஸ்ட்ரீம் ஒரு "சோதனை" தான் என்று நிறுவனம்
தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தி வெர்ஜினில் வெளியிடப்பட்ட ஒரு
அறிக்கையில் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, தற்போது பிராண்டுகளுக்கு மட்டுமே
ஷாப்பிங் லைவ்ஸ்ட்ரீம்களை ஹோஸ்ட் செய்ய திட்டமிட்டுள்ளது என்றும் வழக்கமான
ட்விட்டர் யூசர்களுக்கு அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளது.